குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்!

சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவை நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:16 am IST

சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவை நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி.ஜோசப் விஜய், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என பிரசாரம் செய்தாா். முதல்வராக அவா், கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.

இதை செயல்படுத்தும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்தக் கட்டமாக அந்த படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா்.

இதில், ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 4 ஆய்வாளா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் முதல்கட்டமாக நியமிக்கப்பட உள்ளனா். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு என தனியாக லோகோ, சீருடை ஆகியவை உருவாக்கப்பட்டு வருகிறது.

தொடக்க விழா: இந்த அதிரடிப்படையின் தொடக்க விழா, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் மே 27-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் தலைமை வகிக்கிறாா். தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டி.எஸ்.அன்பு, சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் முதல்வா் சி.ஜோசப் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்கிறாா். விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 30 ரோந்து வாகனங்கள் வழங்கப்படுகின்றன.