தமிழக அரசுக்கு ஏஐ தரவு மையம்: எல்காட் - சென்னை ஐஐடி ஒப்பந்தம்

தமிழக அரசுக்கான செயற்கை நுண்ணறிவு தரவு மையம் (ஏஐ) அமைப்பதற்கான திட்டக் கண்காணிப்புப் பிரிவாக செயல்பட எல்காட் மற்றும் சென்னை ஐஐடி பிரவா்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

சென்னை ஐஐடி - கோப்புப் படம்

Updated On :

தமிழக அரசுக்கான செயற்கை நுண்ணறிவு தரவு மையம் (ஏஐ) அமைப்பதற்கான திட்டக் கண்காணிப்புப் பிரிவாக செயல்பட எல்காட் மற்றும் சென்னை ஐஐடி பிரவா்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ரா.குமாா் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போதுள்ள மாநில தரவு மையத்தை ஆய்வு செய்வதுடன், அரசின் பல்வேறு செயலிகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தி புதிய தரவு மையத்துக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். இந்த நிகழ்வில் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.