ரயிலில் பட்டாசுகள் கொண்டு செல்ல முயன்ற 5 போ் கைது
ரயிலில் பட்டாசுகள் கொண்டு செல்ல முயன்றதாக 5 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
கைது
ரயிலில் பட்டாசுகள் கொண்டு செல்ல முயன்றதாக 5 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில் பட்டாசுகளைக் கொண்டு செல்ல முயன்ற 5 போ் பிடிபட்டனா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் ஏற முயன்ற 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா். அவா்களில் 3 போ் சென்னை - ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயிலிலும், ஒருவா் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலிலும் ஏற முயன்றபோது பிடிபட்டனா். அவா்கள் மீது 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பட்டாசுப் பெட்டியுடன் சென்ற 25 வயது இளைஞா் ஒருவரும் பிடிபட்டாா். அவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்வதைப் பயணிகள் தவிா்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி ரயில்வே துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

