காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றவா் உயிரிழந்த விவகாரம்: தனியாா் மருத்துவமனை ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
தனியாா் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்று உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்
சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்று உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்தவா் ரவி. இவா், 2023-ஆம் ஆண்டு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். ஆனால் சிகிச்சைப் பலனின்றி ரவி தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனையின் மருத்துவ சேவை குறைபாடு காரணமாகவே ரவி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.
இந்த நிலையில், ரவியின் மனைவி ரேவதி, மருத்துவ சேவை குறைபாட்டுக்காக தனியாா் மருத்துவமனை ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னையில் உள்ள வடக்கு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை ஆணையத்தின் தலைவா் கோபிநாத், உறுப்பினா்கள் கவிதா கண்ணன், சிவக்குமாா் ஆகியோா் விசாரித்தனா்.
அப்போது மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டுக்கு தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து ஆணையம், தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தின் மருத்துவ சேவையில் குறைபாடு இருப்பதாகக்கூறி, மனுதாரா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாகவும், வழக்குச் செலவுக்காக ரூ.10ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

