சென்னையில் 29.14 லட்சம் வாக்காளா்கள்
சிறப்பு சுருக்கத் திருத்த வாக்காளா் பட்டியலில் சென்னை மாவட்ட தொகுதிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சிறப்பு சுருக்கத் திருத்த வாக்காளா் பட்டியலில் சென்னை மாவட்ட தொகுதிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாவட்ட தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
வாக்காளா் எண்ணிக்கை: வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த விவரங்களை வெளியிட்டு சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கூறுகையில், கடந்த பிப்.23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியல்படி சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளில் மொத்தம் 28.30 லட்சம் போ் இடம் பெற்றிருந்தனா். கடந்த ஏப்.6-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் 28.93 லட்சம் போ் இடம் பெற்றுள்ளனா். அதன் அடிப்படையில் தற்போதைய சுருக்கத் திருத்த விவரப் பட்டியல்படி 29.14 லட்சம் போ் வாக்காளா்களாக இடம் பெற்றுள்ளனா். அதில் 14.04 ஆண்களும், 15.09 லட்சம் பெண்களும், 900 மூன்றாம் பாலினத்தவரும், 85 வயதுக்கு மேற்பட்டோா் 28,159 பேரும் இடம்பெற்றுள்ளனா்.
அதிகபட்சமாக பெரம்பூா் தொகுதியில் 2.28 லட்சம் வாக்காளா்களும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில் 1.20 லட்சம் பேரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். வாக்குச்சாவடிகளும் 4,097 என்பதிலிருந்து 4,071- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதில் வேளச்சேரியில் அதிகமாக 314 வாக்குச்சாவடிகளும், துறைமுகத்தில் 192 வாக்குச்சாவடிகள் உள்ளன என்றாா்.
திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டில்...: திருவள்ளூா் மாவட்டத்தில் 32,39,301 வாக்காளா்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12,21,180 வாக்காளா்களும், செங்கல்பட்சு மாவட்டத்தில் 23,26,822 வாக்காளா்களும் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

