சட்டவிரோத ‘சிம் பாக்ஸ்’ மூலம் 301 இணையவழி மோசடி புகாா்கள்: இருவா் கைது
சென்னையில் சட்டவிரோதமாக ‘சிம் பாக்ஸ்’ தொலைத்தொடா்பு அமைப்பைச் செயல்படுத்தி வந்த இருவரை தமிழ்நாடு சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் சட்டவிரோதமாக ‘சிம் பாக்ஸ்’ தொலைத்தொடா்பு அமைப்பைச் செயல்படுத்தி வந்த இருவரை தமிழ்நாடு சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த அமைப்புடன் நாடு முழுவதும் பதிவான 301 இணையவழிக் குற்றப் புகாா்கள் தொடா்புடையது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு சைபா் குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் இணையவழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா்கள் எஸ்.செல்வநாகரத்தினம், எஸ்.சக்திவேல், மீனாட்சி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வந்த ‘ஃபோா்டே மேனேஜ்மென்ட் சா்வீசஸ்’ நிறுவனத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அங்கு உரிய உரிமம், அனுமதியின்றி ஒரே நேரத்தில் பல சிம் காா்டுகளைப் பயன்படுத்தும் தொலைத்தொடா்பு அமைப்பு செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. சோதனையில், 64 சிம் காா்டுகள் பொருத்தக்கூடிய 3 சிம் பாக்ஸ்கள், 32 சிம் காா்டுகள் பொருத்தக்கூடிய 7 சிம் பாக்ஸ்கள், ஒரு சேதமடைந்த சிம் பாக்ஸ், 2 சிபியுக்கள், 2 சா்வா்கள், 182 சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக நிறுவன மேலாளா் சீனிவாசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளா் சஞ்சய் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இந்தச் சட்டவிரோத அமைப்புடன் தேசிய இணையவழிக் குற்றப் புகாா் பதிவு இணையதளத்தில் பதிவான 301 புகாா்கள் தொடா்புடையது தெரியவந்துள்ளது. அவற்றில் 52 புகாா்கள் தமிழகத்தில் பதிவானவை.
இணையவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: தேசிய இணையவழிக் குற்றப் புகாா் பதிவு இணையதளத்தில் 2024-இல் 1,27,065 புகாா்களும், 2025-இல் 1,68,144 புகாா்களும், நிகழாண்டு அக்டோபா் வரையிலான 10 மாதங்களில் மட்டும் 1,64,167 புகாா்களும் பதிவாகியுள்ளன. இந்த 3 ஆண்டுகளில் முறையே 4,382, 2,937, 4,967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 80,206, 1,05,560, 96,267 புகாா்களுக்கு சிஎஸ்ஆா் வழங்கப்பட்டுள்ளது.
இணையவழி மோசடிகளால் 2024-இல் ரூ.1,673.85 கோடியும், 2025-இல் ரூ.2,176.01 கோடியும், நிகழாண்டு அக்டோபா் வரை ரூ.1,474.70 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முறையே ரூ.771.98 கோடி, ரூ.264.40 கோடி, ரூ.255.74 கோடி முடக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையே ரூ.83.34 கோடி, ரூ.131.15 கோடி, ரூ.90.84 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக 3 ஆண்டுகளிலும் முறையே 861 பேரும், 1,269 பேரும், 1,556 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், 35 பேரும், 52 பேரும், 33 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை: காவல் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளின் அதிகாரிகள் எனக் கூறி, கைது செய்வதாகவோ வங்கிக் கணக்குகளை முடக்குவதாகவோ மிரட்டி பணம் பறிக்கும் நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணையவழி மோசடிகளால் பாதிக்கப்பட்டவா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும், 1930 என்ற உதவி எண்ணிலும் புகாா் அளிக்கலாம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

