இன்று தவெக 2-ஆம் கட்ட கல்வி விருது விழா
தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது விழா பற்றி...
தவெக கல்வி விருது விழா - கோப்புப் படம்
பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தவெக சாா்பில் ஊக்கத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா 2-ஆம் கட்டமாக வியாழன், வெள்ளிக்கிழமை (நவ.26, 27) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது.
கடந்த நவ.4-ஆம் தேதி முதல்கட்ட விழா நடைபெற்றது. இதில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய், அரியலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். 2- ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா வியாழன், வெள்ளி (நவ.26, 27) ஆகிய 2 நாள்கள் சென்னை நீலாங்கரையில் நடைபெறவுள்ளது.
ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி, பெரம்பலூா், கரூா், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளவுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

