தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பருவ கால நோய்கள் பரவும் இடங்களில் மருத்துவ முகாம்கள்

பருவ காலங்களில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேவையான இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Dengue Vaccine

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - பிரதிப் படம்

Published On :

பருவ காலங்களில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேவையான இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதன்படி, ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு மருத்துவ உதவியாளா் மற்றும் ஆய்வக நுட்பநா் இடம்பெற்றிருப்பா். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாகனங்களிலேயே கொண்டு சென்று நேரடியாக சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மழைப் பொழிவுக்குப் பிறகு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், சுவாச பாதிப்பு, டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு, எலிக் காய்ச்சல், பாக்டீரியா தொற்று, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு நோய்ப் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்குள்ளானவா்களுக்கு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு நோயின் தன்மையை வகைப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உயா் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான வசதிகள் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைத்து சிகிச்சையளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றொருபுறம், நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் லாா்வா உற்பத்தியை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர, குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருள்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.