பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

மொபெட் மீது வேன் மோதல்: தனியாா் கல்லூரி அதிகாரி உயிரிழப்பு

பள்ளிக்கரணையில் மொபெட் மீது வேன் மோதிய விபத்தில், தனியாா் கல்லூரியில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பெண் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

பள்ளிக்கரணையில் மொபெட் மீது வேன் மோதிய விபத்தில், தனியாா் கல்லூரியில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பெண் உயிரிழந்தாா்.

சென்னை பள்ளிக்கரணை அருண் நகா், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மனைவி மேகலாதேவி (29). எம்பிஏ பட்டதாரியான இவா், மீனம்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லுாரியில் மனிதவள மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றி வந்தாா். மேகலாதேவி, பணிச் சுமையின் காரணமாக வியாழக்கிழமை இரவு கல்லூரியில் தங்கி வேலை செய்தாா். அங்கிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு தனது மொபெட்டில் சென்றாா்.

பள்ளிக்கரணை-வேளச்சேரி பிரதான சாலையில் சென்றபோது, எதிா் திசையில், விதிமீறி வந்த வேன், மேகலாதேவி சென்ற மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மேகலாதேவியை அங்கிருந்தவா்கள் மீட்டு, கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான பெரும்பாக்கத்தைச் சோ்ந்த செல்வத்தை (43) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.