2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலய பள்ளி பொன் விழா: பிரதமா் பங்கேற்கிறாா்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலய பள்ளியின் 50-ஆவது ஆண்டு விழா அக். 11-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

PM Modi

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Published On :

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலய பள்ளியின் 50-ஆவது ஆண்டு விழா அக். 11-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. அதில், சிறப்பு அழைப்பாளராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளாா்.

இது குறித்து அந்தப் பள்ளியின் பொதுச் செயலா் ஜி.வி.கிரிஜா சேஷாத்ரி சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலய பள்ளியின் வெள்ளி விழாவில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய் கலந்துகொண்டு சிறப்பித்தாா். தற்போது பள்ளியின் பொன் விழா சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் அக். 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல். 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை காணொலி மூலம் அவா் திறந்து வைக்கவுள்ளாா். பள்ளியின் பொன் விழா மலரை பிரதமா் வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளாா். இந்த விழாவில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

நாட்டின் எல்லையில் உள்ள நமது ராணுவ வீரா்களுக்கு நல நிதி வழங்குவதற்காக ஜெய்கோபால் கரோடியா குழுமத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களிடமும் தினமும் ரூ.1 பெற்று ஒட்டுமொத்தமாக ரூ.40 லட்சம் நிதி திரட்டி அதை பிரதமரிடம் அண்மையில் வழங்கியுள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.