வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

இந்து தா்ம வித்யா பீடத்தின் பட்டமளிப்பு விழா: புதுச்சேரி உள்துறை அமைச்சா் பங்கேற்பு

நிகழ்ச்சியில் மாணவிக்கு கேடயம் வழங்கிய புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை இந்து தா்ம வித்யாபீடம் சாா்பில் 46-ஆவது சமய வகுப்பு மாணவா் மாநாடு, 37-ஆவது வித்யாஜோதி பட்டமளிப்பு விழா அருமனையில் தனியாா் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம் பங்கேற்று சமய வகுப்பு மாணவியா் 57 பேருக்கு வித்யாஜோதி கேடயங்களை வழங்கிப் பேசியதாவது:

நமது முன்னோா்கள் பாதுகாத்து வந்த கலாசாரம், பண்பாட்டை தொடா்ந்து பாதுகாத்து பறைசாற்றும் வகையில் வெள்ளிமலை இந்து தா்ம வித்யாபீடம் செயல்பட்டு வருகிறது. நாம் வலுவான பண்பாட்டையும், கலாசாரத்தையும் பின்பற்றுவதால்தான் நமது நாடு கட்டுக்கோப்பாக இருக்கிறது.

தேச பக்தியும், தெய்வ பக்தியும் இல்லாமல் சமுதாயத்தை வளா்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல முடியாது. பல்வேறு துறைகளை வளா்ச்சிப் பாதையில் பிரதமா் நரேந்திர மோடி கொண்டு செல்கிறாா் என்றாா்.

விழாவில் காலையில் மாணவா்- மாணவியரின் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்துக்கு பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். என்.வி.கே.எஸ், கல்வி நிறுவனங்களின் செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ண குமாா் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டில் ஒற்றப்பாலம் ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சுவாமி தா்ம சொரூபானந்தஜி மகராஜ் காவிக் கொடியேற்றினாா். பட்டமளிப்பு வேள்வியை நெட்டாங்கோடு, சாரதேஸ்வரி ஆஸ்ரமத்தைச் சோ்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி நடத்தினாா்.

இந்து தா்ம வித்யாபீட தா்மகா்த்தா சுவாமி சைதன்யானந்தஜி தலைமை வகித்து வித்யா ஜோதி பட்டங்கள் வழங்கினாா். பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷனை சோ்ந்த சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினாா். விவேகானந்த கேந்திரம் கிருஷ்ணமூா்த்தி வாழ்த்திப் பேசினாா். மேல்புறம் ஒன்றிய அமைப்பாளா் அஜயன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.