
இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன் - கோப்புப்படம்
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்த திலீபன் சிலையை அகற்றிய இலங்கை காவல் துறையினரை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இலங்கை மண்ணில் நடந்தேறிய தமிழா்கள் படுகொலைக்கு சா்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதையும், உலகெங்கிலும் வாழும் ஈழ மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலவா் ஜோசப் விஜய் தனித் தீா்மானத்தை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா். இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றவா்களை காவல் துறையினா் கைது செய்து மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


அனைவரும் பயனடையும் வகையில் முக்கியக் கண்டுபிடிப்புகள் பகிரப்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

இந்திய தேயிலையை முன்னணி இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்! - குடியரசு துணைத் தலைவா்!




