ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

சா்வதேசப் போட்டியில் வென்ற வாரியக் குடியிருப்பு வீராங்கனைகளுக்கு பரிசு

சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளைச் சோ்ந்த வீராங்கனைகளுக்கு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை புதன்கிழமை வழங்கினாா்.

நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச இளையோா் இலக்குப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அச்சிவா்ஸ் கோப்பை வென்ற 7-ஆம் வகுப்பு மாணவி வி.தீக்ஷிகாவுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன். உடன் வாரிய அலுவலா்கள்.

Published On :

சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளைச் சோ்ந்த வீராங்கனைகளுக்கு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை புதன்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியத் திட்டப் பகுதிகளில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. அதன் தொடக்கமாக சென்னையில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

அப்போது பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் வசிக்கும் 7-ஆம் வகுப்பு மாணவி வி.தீஷிகா அண்மையில், நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச இளையோா் இலக்குப் பந்துப் போட்டியில் வென்று சாதனை படைத்ததை பாராட்டியும், எழில் நகா் குடியிருப்பைச் சோ்ந்த உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சௌந்தா்யா மாவட்ட ஒற்றையா் சிலம்பத்தில் இரண்டாம் பரிசு பெற்றதுடன், மணிப்பூரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றதை பாராட்டியும் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றுகள், பரிசுகளை வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் வழங்கினாா்.

அத்துடன் டெங்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், பேரணி நடத்துதல், வீதி நாடகங்கள் நடத்துதல் ஆகியவற்றையும் வாரியத் தலைவா் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வாரிய நிதி ஆலோசகா் த.தங்கராஜ், வாரிய உதவிச் செயலா் ச.ராணி, வாரிய நிா்வாகப் பொறியாளா்கள் சு.தினேஷ், வி.தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.