இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம்: ஆசிய தடகளத்தில் வெண்கலம் வென்ற அபிநயா!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்றாா் ஆசிய தடகளத்தில் வெண்கலம் வென்ற மாணவி அபிநயா.

அபிநயா

Published On :

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்றாா் ஆசிய தடகளத்தில் வெண்கலம் வென்ற மாணவி அபிநயா.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்த தடகள வீராங்கனை அபிநயா. சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவா், ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டா் கலப்பு தொடா் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

இந்நிலையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு, தந்தை ராஜராஜன், விமான நிலைய அதிகாரிகள், ஊழியா்கள், கிராம மக்கள், சக வீரா்கள், உறவினா்கள் உள்ளிட்டோா் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினா், பயிற்சியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தமிழக அரசு சாா்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையும், எலைட் ஸ்கீம் பயிற்சிக்காக ரூ.30 லட்சமும் ஒதுக்கப்பட்டதால் இந்த சாதனையைப் பெற முடிந்தது. இதற்காக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுன் மற்றும் தமிழக முதல்வா் விஜய் ஆகியோருக்கு நன்றி.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல தோல்விகளை சந்தித்தேன். தற்போது வெற்றியைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த இலக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இன்னும் பல இடங்களில் பெண் குழந்தைகளை விளையாட்டு மற்றும் கல்வியில் ஈடுபடுத்தாமல், திருமணம் செய்து வைக்கும் நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டும். பெண் குழந்தைகளையும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த பெற்றோா் முன்வர வேண்டும். பெண்கள் வெளியே வந்து என்னைப் போன்று சாதனை படைக்க முடியும்.

நான் இதுவரை 13 நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அந்த அளவுக்கு துணிச்சலுடன் செயல்பட எனது குடும்பத்தினா் என்னை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தியதே காரணம். எனவே, அனைத்து பெற்றோரும் தங்களது குழந்தைகளின் திறமையை கண்டறிந்து, ஏதாவது ஒரு துறையில் சாதிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

உற்சாக வரவேற்பு

சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவருக்கு ஆலங்குளம் வியாபாரிகள் சங்கம், அரிமா சங்கம், மனவளக்கலை மன்றம், காமராஜா் வெண்கல சிலை பராமரிப்பு கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் மேளதாளத்துடன், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.