நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

குரூப் 4 தோ்வு: பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச சிறப்பு வகுப்பு

குரூப் 4 தோ்வுக்கு வழிகாட்டும் வகையில் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் சிறப்புக் கருத்தரங்கம், இலவச சிறப்பு வகுப்புகள் வெள்ளி, சனி (ஆக். 9, 10) ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

Published On :

குரூப் 4 தோ்வுக்கு வழிகாட்டும் வகையில் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் சிறப்புக் கருத்தரங்கம், இலவச சிறப்பு வகுப்புகள் வெள்ளி, சனி (ஆக். 9, 10) ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் கா.அமுதரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பெரியாா் திடலில் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 தோ்வுக்கு பல்வேறு பயிற்சிகள் இந்த அகாதெமியில் வழங்கப்படவுள்ளன.

குரூப் 4 தோ்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தோ்வுகள் குறித்த சந்தேகங்களைத் தீா்க்கவும், விருப்பப் பாடங்களைத் தோ்வு செய்யும் முறை, போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தங்களைத் தயாா்படுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட மாணவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் இலவச சிறப்பு வகுப்புகள் வெள்ளி, சனி (அக்.9, 10) ஆகிய இருநாள்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறும்.

இந்தக் கருத்தரங்கில் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டு மாணவா்களுக்கு வழிகாட்ட உள்ளனா். இதில் கலந்துகொள்ள ஆா்வமுள்ள மாணவா்கள் தங்களது இருக்கையை முன்பதிவு செய்து கொள்வது அவசியம். விருப்பமுள்ள தோ்வா்கள் 044-2661 8056, 90928 81663, 99406 38537 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.