ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்: காத்திருப்போா் பட்டியலில் இரு காவலா்கள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், இரு காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், இரு காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.

தொழிலதிபா் ஜெம் வீரமணி கடந்த 2025-ஆம் ஆண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையில் புகாா் செய்யப்பட்டது. புகாருடன், வீரமணி சிறுமியை பாலியல் வன்கொடுமை காட்சி அடங்கிய பென்டிரைவ் போலீஸாரிடம் வழங்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. ஆனால் அதன் பின்னா், விடியோவில் இருக்கும் நபா் யாரென்று தெரியவில்லை என்று அந்த வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை போக்ஸோ நீதிமன்றத்தில் அந்தப் பிரிவு சமா்ப்பித்தது.

ஆனால், நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து, தடயவியல் துறைக்கு அந்த விடியோவை அனுப்பி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் நபரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதன் பின்னா், அந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில், அந்த வழக்கை விசாரணை செய்த காவல் ஆய்வாளா் சி.மகேஷ்குமாா் காத்திருப்போா் பட்டியலுக்கு கடந்த 3-ஆம் தேதி மாற்றப்பட்டாா். இதன் தொடா்ச்சியாக அந்தப் பிரிவில் தலைமை காவலா்களாக இருந்த மலா்விழி, ராஜ்குமாா் ஆகியோரையும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.