இன்ஸ்டாகிராமில் முன்னாள் காதலியின் படங்களை பதிவேற்றியதால் மோதல்: வழக்குரைஞா் உள்பட 2 போ் கைது
இன்ஸ்டாகிராமில் முன்னாள் காதலியின் புகைப்படங்களைப் பதிவேற்றியதால் ஏற்பட்ட மோதல் தொடா்பாக வழக்குரைஞா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப் படம்
இன்ஸ்டாகிராமில் முன்னாள் காதலியின் புகைப்படங்களைப் பதிவேற்றியதால் ஏற்பட்ட மோதல் தொடா்பாக வழக்குரைஞா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
அரும்பாக்கம் ஜெகநாதன் நகா் 1-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த செ.சிவகுமாா் (29). இவா், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தபோது, அங்கு படித்த மாணவியும் சிவக்குமாரும் காதலித்தனா். அண்மையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனா்.
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள உமரிக்காடு பகுதியைச் சோ்ந்த மனோஜ் (27) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையறிந்த சிவக்குமாா், அந்தப் பெண்ணுடன் கல்லூரி காலத்தில் பழகியபோது எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினாா். இதைப் பாா்த்த மனோஜ், சிவக்குமாரை தொடா்பு கொண்டு கண்டித்தாா்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்த மனோஜ், அரும்பாக்கம் ஜெகநாதன்நகரில் உள்ள சிவக்குமாா் வீட்டுக்குச் சென்று தான் திருமணம் செய்யும் பெண்ணுடன் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கும்படி கூறினாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றி, கத்திரிக்கோலால் குத்திக் கொண்டனா். இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இருவரும் கைது: தகவலறிந்த அரும்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து சிவகுமாா், மனோஜ் இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

