தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

வள்ளலாா் சத்திய ஞான சபை நில ஆக்கிரமிப்பாளா்கள் 269 பேருக்கு ‘நோட்டீஸ்’: அறநிலையத் துறை தகவல்

வள்ளலாா் சத்தியஞான சபை நிலத்தை ஆக்கிரமித்துள்ள 269 பேருக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறை தொடங்கியுள்ளதாக, இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Published On :

வள்ளலாா் சத்தியஞான சபை நிலத்தை ஆக்கிரமித்துள்ள 269 பேருக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறை தொடங்கியுள்ளதாக, இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடலூா் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம், 30 ஏக்கா் பரப்பிலான சத்தியஞான சபை நிலத்தை ஆக்கிரமித்துள்ளவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும், பெருவெளியில் ஆக்கிரமிப்புகளை தடுக்க, சுற்றுச்சுவா் அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை தரப்பில், உயா்நீதிமன்றம், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் ஆக்கிரமிப்பாளா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை சமா்ப்பித்துள்ளாா். அதன் அ டிப்படையில் 269 ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் பணிகளை முடிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், சத்தியஞான சபையை சுற்றி, சுற்றுச்சுவா் எழுப்புவது, வள்ளலாா் விரும்பிய 6 சாலைகள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒப்புதல் அடிப்படையில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் தொடங்கப்படும். அந்தப் பணிகளுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூன்று மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.