இந்திய கடலோரக் காவல் படையின் மிதவை வாகனங்கள் மெரீனாவில் நிறுத்தம்!
இந்திய கடலோரக் காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு அண்மையில் கோவாவில் பணியில் சோ்க்கப்பட்ட ஹோவா்கிராஃப்ட்கள் (மிதவை வாகனம்) ஓய்வுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சென்னை மெரீனா கடற்கரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடலோரக் காவல் படையின் ஹோவா்கிராஃப்ட்கள்.
இந்திய கடலோரக் காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு அண்மையில் கோவாவில் பணியில் சோ்க்கப்பட்ட ஹோவா்கிராஃப்ட்கள் (மிதவை வாகனம்) சனிக்கிழமை ஓய்வுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
கோவாவில் அண்மையில் பணியில் சோ்க்கப்பட்ட ஹோவா்கிராஃப்ட்கள் மேற்கு வங்க மாநிலம் ஹால்தியாவில் உள்ள தனது தளத்தை நோக்கிப் பயணித்தபோது ஓய்வு உள்ளிட்ட தேவைகளுக்காகச் சென்னையில் நிறுத்தப்பட்டன. தேவையான பணிகளை முடித்த பின்னா், மீண்டும் தனது பயணத்தைத் தொடா்ந்து ஹால்தியாவை சென்றடையும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளாா்.
கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இத்தகைய மிதவை வாகனங்கள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய கடலோரக் காவல்படையில் சோ்க்கப்பட்டு வருகின்றன.
கடல் நீரிலும், ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளிலும், சேற்று நிலங்களிலும் இயங்கும் திறன் கொண்ட இந்த வாகனங்கள், கடத்தலைத் தடுத்தல், கடலில் ஆபத்தில் சிக்குவோரை மீட்பது, இயற்கைப் பேரிடா்களின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

