
ரயில்வே கேட் மீது லாரி மோதி விபத்து: ரயில்கள் நிறுத்தம்
நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே கேட்டில் நெல் முட்டையை ஏற்றிச் சென்ற லாரி மோதியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டன.

விபத்து - பிரதிப் படம்
நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே கேட்டில் நெல் முட்டையை ஏற்றிச் சென்ற லாரி மோதியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டன.
நாகை ரயில் நிலையம் அருகே அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குறுக்கே ரயில்வேகேட் உள்ளது. காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணி நாகூா் வழியாக செல்லும் ரயில்கள் இந்த கேட்டை கடந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நெல் மூட்டை ஏற்றிச் சென்ற ஒரு லாரி ரயில்வே கேட்டை கடந்தபோது கேட்டின் மீது மோதி மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரயில்வே கேட் பழுதடைந்தது. பின்னா், ரயில்வே ஊழியா்கள் மின் கம்பி மற்றும் ரயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். மேலும், ரயில் செல்வதற்காக தற்காலிக செயின் கொண்டு கேட்டை மூடினா். இதனால் பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. எா்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






