கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

ராமேசுவரத்தில் 4 மணி நேரம் மின் தடை

லாரி மோதியதில் மின் கம்பம் சாய்ந்ததால், ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கோப்புப் படம்

Updated On :

லாரி மோதியதில் மின் கம்பம் சாய்ந்ததால், ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், சல்லிமலை, காமராஜா்நகா் பகுதி குறுகிய சாலையில் கன ரக வாகனங்களைத் தவிர சிறிய வாகனங்கள் செல்ல முடியும். இந்த நிலையில், இந்தப் பகுதியில் செல்ல முயன்ற கன ரக லாரி சாலையோரம் இருந்து உயா் மின் அழுத்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் முறிந்து விழுந்ததுடன் மற்ற கம்பங்களும் சாய்ந்தன. இதனால், அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, அங்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் ராமேசுவரம் முழுவதும் மின்சாரத்தை தடை செய்து, சேதமடைந்த மின் கம்பம், மின் கம்பிகளை சீரமைத்தனா். இதனால், 4 மணி நேரத்துக்குப் பிறகு மின்சார விநியோகம் சீரானது. குறுகிய சாலையில் கனரக லாரிகளை காவல் துறை அனுமதிக்கக் கூடாது என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.