தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் 132 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 132 சிறப்பு ரயில்கள்... - கோப்புப் படம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில், 132 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை சமாளிக்க, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கு இடையே 132 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை, மதுரை, ராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை, புது தில்லி உள்ளிட்ட நகரங்களில் 132 சிறப்பு ரயில்கள் மற்றும் 22 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து, சென்னையின் முக்கிய ரயில்வே நிலையங்களில் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த 180 ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 25 ஓய்வுபெற்ற ரயில்வே பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், பயணிகள் கூட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் என்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளின் தன்னார்வலர்கள் மற்றும் அரசு ரயில்வே காவல் துறையினர் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக நீண்டதூர ரயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் உடன் அனுப்பப்படுவதாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Southern Railway is running 132 special trains on the occasion of Diwali.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


