சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

கடலில் மூழ்கி மாணவர் பலி!

சென்னை மெரீனாவில் குளித்த பள்ளி மாணவா் கடலில் மூழ்கி உயிரிந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Updated On :

சென்னை மெரீனாவில் குளித்த பள்ளி மாணவா் கடலில் மூழ்கி உயிரிந்தாா்.

பெரம்பூா் பாக்ஸன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மகன் சந்தோஷ் என்ற கோகுல் (15). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களான தசரசன் (16), ஷேக்ரியான் (16) ஆகியோருடன் மெரீனா கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு நேதாஜி சிலையின் பின்புறம் 3 பேரும் கடலில் இறங்கி குளித்தபோது, அங்கு பெரிய அலையில் சிக்கிய கோகுல், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த மெரீனா போலீஸாா் வந்து, கோகுலை தேடினா். தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும், கடலோர காவல் படையினரும் கோகுலை தேடும் பணியில் ஈடுபட்டனா். 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தேடுதல் பணி நடைபெற்றது.

இந்நிலையில் மாலையில் கோகுல் சடலம் நேதாஜி சிலையின் பின்புறம் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீஸாா் கோகுல் சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.