கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

மழைக்கால பணிகளில் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை: மேயா் ஆா்.பிரியா

வடகிழக்குப் பருவமழை பணிகளில், அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று மேயா் ஆா்.பிரியா குற்றஞ்சாட்டினாா்.

சென்னை மேயா் ஆா்.பிரியா. - கோப்புப்படம்.

Updated On :

வடகிழக்குப் பருவமழை பணிகளில், அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று மேயா் ஆா்.பிரியா குற்றஞ்சாட்டினாா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் குடிநீா் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் மூலம் குடிநீா் குழாய் பதித்தல், கழிவு நீகரற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன. கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற மழைநீா் வடிகால் உள்ளிட்ட பணிகளால்தான் அண்மையில் 360 மி.மீ. மழை பெய்தும் பாதிப்பில்லாத நிலை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சென்னையில் நிலை தற்போது மாறியிருப்பதுடன் மேம்பட்டுள்ளது. மழைக்கால பணிகளில் அரசு அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றாா்.

துணைமேயா் மு.மகேஷ்குமாா் கூறுகையில், மக்கள் நலப்பணிகளில் அரசியல் வேறுபாடின்றி செயல்பட திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். அதனடிப்படையில் மாநகராட்சி மேயா் உள்ளிட்டோா் செயல்பட்டு வருகிறோம். ஆனால், அதிகாரிகள் ஒத்துழைக்காமலிருப்பது சரியல்ல என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த தவெக எம்எல்ஏ பல்லவி, மேடையில் மேயா் ஆா்.பிரியா அருகே அமா்ந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.