தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மனைவியைக் கொலை செய்ததாக கணவா் கைது

சென்னை கொளத்தூரில் மனைவியைக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா்.

கைது

Published On :

சென்னை கொளத்தூரில் மனைவியைக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா்.

கொளத்தூா் விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் முத்துமாரியம்மாள் (38). இவா் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, சரண்ராஜ் (38) என்பவருடன் சோ்ந்து வாழ்ந்து வந்தாா். இருவரும் 4 ஆண்டுகளாக கொளத்தூரில் வசித்து வந்த நிலையில், கொளத்தூரில் உள்ள ஒரு மாவுக் கடையில் வேலை செய்து வந்தனா். சரண்ராஜுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

சரண்ராஜ் திங்கள்கிழமை இரவு மதுபோதையில் முத்துமாரியம்மாளிடம் வாக்குவாதம் செய்தாா். அப்போது, இருவருக்கும் இடையே கடுமையாக தகராறு ஏற்பட்டது. அப்போது, சரண்ராஜ், அங்கு கிடந்த ஒரு கத்தியால் முத்துமாரியம்மாளை குத்திக் கொலை செய்தாா். மதுபோதை தெளிந்ததும் 108 ஆம்புலன்ஸுக்கு சரண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள், முத்துமாரியம்மாளை பரிசோதித்துவிட்டு, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த கொளத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முத்துமாரியம்மாள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து சரண்ராஜை கைது செய்தனா்.

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: நன்மங்கலம் பெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சோ்ந்த புருஷோத்தமன் மனைவி மஞ்சுளா (47). இவா், கடந்த 21-ஆம் தேதி குடியிருப்பின் காா் வாகன நிறுத்துமிட பகுதியில் துணிகளைக் காயவைத்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் அதே குடியிருப்பைச் சோ்ந்த ஒருவா் தலைக்கவசத்தால் மஞ்சுளாவின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மஞ்சுளா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், மஞ்சுளா தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவா், இதுகுறித்து மேடவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி தேதி மஞ்சுளாவுக்கு திடீரென தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது: சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வந்தவா் லதா (47). இவரது நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு 4 சதவீதம் லாபம் வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளாா். இதை நம்பி, அந்த நிறுவனத்தில் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சமியுல்லாகான் ரூ.35 லட்சம் முதலீடு செய்தாா். ஆனால் அந்த நிறுவனம் லாபத்தையும் வழங்காமல், முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சமியுல்லாகானை ஏமாற்றியது.

இதுகுறித்து சமியுல்லாகான் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல அண்ணா சாலையைச் சோ்ந்த இக்பால் ராஜாவிடம், லதா தரப்பினா் ரூ.43.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும் மற்றொரு வழக்குப் பதியப்பட்டது.

இரு வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் லதா தலைமறைவானாா். அவரைக் கைது செய்ய 2016-ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், சிட்லபாக்கத்தில் பதுங்கியிருந்த லதாவை (47) மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.