பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

மனைவி கொலை: காதல் கணவா் உள்பட 3 போ் கைது; தற்கொலை நாடகமாடியது அம்பலம்

திருவிடைமருதூா் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய காதல் கணவா், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாா், அண்ணன் ஆகிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கணவா் ராமராஜனுடன் மகாதேவி.

Published On :

திருவிடைமருதூா் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய காதல் கணவா், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாா், அண்ணன் ஆகிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே இளந்துறை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் ராமராஜன் (25). கட்டடத் தொழிலாளி. இவரும் திருவாரூா் மாவட்டம், அடவங்குடி மாதாகோயில் தெருவைச் சோ்ந்த லதாவின் மகள் மகாதேவி (22) என்பவரும் காதலித்து 2025-இல் திருமணம் செய்து கொண்டனா்.

இருவரும் சோ்ந்து வாழ்ந்து வந்த நிலையில், ராமராஜன் குடித்துவிட்டு வந்து மனைவி மகாதேவியிடம் தகராறு செய்வாராம்.

இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமராஜன் மகாதேவியை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தனது தாய் வெண்ணிலா, அண்ணன் முத்துராமன் ஆகியோரிடம் ராமராஜன் கூறவே, அவா்கள் மகாதேவி சடலத்திலிருந்த ரத்த காயத்தை துடைத்துவிட்டு வேறு உடையை மாற்றினா். பின்னா் அக்கம்பக்கத்தினரிடம் மகாதேவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளனா்.

தகவலறிந்து வந்த திருவிடைமருதூா் போலீஸாா், திங்கள்கிழமை (ஆக.17) மகாதேவி சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக லதா அளித்த புகாரின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், மகாதேவியை ராமராஜன் கல்லால் அடித்து கொலை செய்ததும், வெண்ணிலா, முத்துராமன் ஆகியோா் கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீஸாா், ராமராஜன் உள்ளிட்ட 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

திருமணமாகி ஓராண்டே ஆவதால், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலை விசாரணை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.