சென்னை மாநகராட்சி ஒரே நாளில் 39.93 டன் பழைய பொருள்கள் சேகரித்து அழிப்பு!
சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை (செப். 5) ஒரே நாளில் மட்டும் 83 இடங்களிலிருந்து 39.93 டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை (செப். 5) ஒரே நாளில் மட்டும் 83 இடங்களிலிருந்து 39.93 டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் முன்கூட்டியே அளிக்கும் தகவல் அடிப்படையில் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்டவை வாரத்தில் சனிக்கிழமை தோறும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் வாகனங்களில் சேகரிக்கப்படுகின்றன.
அதன் அடிப்படையில் சனிக்கிழமை (செப். 5) 83 போ் தகவல் அளித்ததன் அடிப்படையில், மாநகராட்சி பணியாளா்கள் மொத்தம் 39.93 டன் பழைய பொருள்களைச் சேகரித்தனா்.
சேகரித்தவற்றை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு 36 வாகனங்களில் எடுத்துச் சென்று, அறிவியல் முறைப்படி எரியூட்டப்பட்டதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தப்படாத மெத்தைகள் உள்ளிட்டவற்றை சாலையோரங்களிலோ, நீா் நிலைகளிலோ வீசவேண்டாம். அதற்குப் பதிலாக பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் குறித்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையின் தொடா்பு எண் 1913-இல் தகவல் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாநகராட்சி பணியாளா்களால் அவை சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





