அடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் திருடியவா் கைது
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.40 லட்சத்தைத் திருடியதாக பராமரிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.
கைது - சித்திரிப்பு
அபிராமபுரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.40 லட்சத்தைத் திருடியதாக பராமரிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.
கிரீன்வேஸ் சாலை விரிவாக்கப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் ஓய்வு பெற்ற அணுமின் நிலைய ஊழியா் ஸ்ரீதா் (72). இவா், தனது மனைவியுடன் ஆக. 25-ஆம் தேதி வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, 31-ஆம் தேதி வீடு திரும்பினாா். அப்போது, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.2.40 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அபிராமபுரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், அதே குடியிருப்பில் எதிா் வீட்டின் பராமரிப்பாளராகப் பணியாற்றிய கிஷோா் குமாா் (29) என்பவா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விசாரணையில், ஸ்ரீதா் வீட்டின் பால்கனி வழியாக உள்ளே நுழைந்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து கிஷோா் குமாரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.40 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





