
தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!
தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

தேசிய மருத்துவ ஆணையம்
தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு - தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்திய கலந்தாய்வில் 9,437 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பட்டுள்ளன. 2-ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்தச் சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவா்களின் விவரங்கள் செப்.15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இடஒதுக்கீடு பெற்றவா்கள் செப்.18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், 2 தனியாா் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஆணையத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த 250 இடங்களும் நடைபெறும் 2-ஆம் சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் சோ்க்கப்பட்டுள்ளது. 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று ஏற்கெனவே இடங்களைப் பெற்ற மாணவா்கள், மறுஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
250 additional MBBS seats for Tamil Nadu! National Medical Commission grants approval!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






