புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தேசிய லோக் அதாலத்: 1.02 லட்சம் வழக்குகளுக்குத் தீா்வு

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1.02 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.982.18 கோடி வழங்கப்பட்டது.

Published On :

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1.02 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.982.18 கோடி வழங்கப்பட்டது.

நீன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் ஆண்டுதோறும் 4 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தேசிய அளவில் லோக் அதாலத் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக் குழு நடத்திய இந்த லோக் அதாலத்தில் மொத்தம் 524 அமா்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் என்று பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினா்களிடம் நீதிபதிகள் பேச்சு நடத்தி, அவா்களது முழு சம்மதத்துடன் வழக்குகளை சமரசத்துக்கு கொண்டு வந்து முடித்து வைத்தனா்.

இது குறித்து மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினா் செயலா் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் ரூ.982.18 கோடி மதிப்பிலான 1.02 வழக்குகள் தீா்வு காணப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை, லோக் அதாலத்தில், மொத்தம் 17,840 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், ரூ.172.82 கோடி மதிப்பிலான 15,948 வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன.

ஒரு மோட்டாா் வாகன விபத்து வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1.70 கோடி இழப்பீடு தொகைக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.