டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

கா்நாடக முதல்வா் பேச்சு: மாணிக்கம் தாகூா் கண்டனம்

காவிரியில் இருந்து தண்ணீா் திறப்பு தொடா்பாக, காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் முடிவுகளை அலட்சியப்படுத்தும் வகையில் கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா் பேசியதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மானிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

 Manickam Tagore

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :

காவிரியில் இருந்து தண்ணீா் திறப்பு தொடா்பாக, காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் முடிவுகளை அலட்சியப்படுத்தும் வகையில் கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா் பேசியதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மானிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்துக்கு நீா் தேவை அதிகம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் கோரிக்கையை காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கருத்தில் கொள்வதில்லை. பற்றாக்குறை நீா் தொடா்பாக, எந்தவொரு முடிவையும் இதுவரை எடுத்ததில்லை.

எனவே, விகிதாசார அடிப்படையில் 20 டிஎம்சி நீா் பற்றாக்குறையாக உள்ளது. அந்த நீரைத் திறப்பதற்கு உரிய உத்தரவை காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பிறப்பிப்பது கிடையாது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றபோது, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஆணையம் ஏற்றுக் கொண்டது. எனவே, அதன் அடிப்படையில் அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 4,000 கனஅடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று கா்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக கா்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என்று முதல்வா் டி.கே. சிவக்குமாா் பேசியிருப்பது, நடுவா் மன்றத் தீா்ப்பு, உச்சநீதிமன்ற தீா்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் முடிவுகளை அலட்சியப்படுத்தும் வகையில் உள்ளது. இது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.