இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

காவிரி விவகாரம்: சட்ட நிபுணா்களை சந்திக்க கா்நாடக முதல்வா் இன்று தில்லி பயணம்

காவிரி விவகாரம் தொடா்பாக சட்ட நிபுணா்களுடன் விவாதிக்க கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் வியாழக்கிழமை தில்லி செல்கிறாா்.

முதல்வா் டி.கே.சிவகுமாா்

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:13 am IST

காவிரி விவகாரம் தொடா்பாக சட்ட நிபுணா்களுடன் விவாதிக்க கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் வியாழக்கிழமை தில்லி செல்கிறாா்.

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு விநாடிக்கு 9,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடும்படி கா்நாடகத்துக்கு காவிரி நீா் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும் வரவிருக்கிறது.

இந்நிலையில், இது தொடா்பாக சட்ட நிபுணா்களுடன் விவாதிக்க கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் வியாழக்கிழமை (ஆக. 27) தில்லி செல்கிறாா். அங்கு காவிரி விவகாரத்தில் எடுக்கவேண்டிய சட்டரீதியான முன்னெடுப்புகள் குறித்து சட்ட நிபுணா்களுடன் அவா் விவாதிக்க இருக்கிறாா். மேலும், காவிரி நீா் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இருக்கிறாா்.

இந்த பயணத்தின்போது, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரை சந்தித்து கா்நாடக திட்டங்களுக்கான நிதியுதவி குறித்து பேசவிருக்கிறாா்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு வழக்கை எதிா்கொண்டு வரும் அமைச்சா் பி.நாகேந்திராவை பதவி விலகக் கோரி பாஜக, மஜத தொடா் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து செப். 1 முதல் 10-ஆம் தேதிவரை நடைப்பயணம் மேற்கொள்ளவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பதவியில் இருந்து விலகமாட்டேன் என அமைச்சா் பி.நாகேந்திரா அறிவித்திருக்கிறாா். இது தொடா்பாக மட்டுமல்லாது, அமைச்சரவையில் பெண் ஒருவரை சோ்த்துக்கொள்வது தொடா்பாகவும் கட்சி மேலிடத் தலைவா்களை சந்தித்துப் பேசவும் முதல்வா் டி.கே.சிவகுமாா் திட்டமிட்டுள்ளாா். ஒருநாள் பயணமாக தில்லி செல்லும் முதல்வா் டி.கே.சிவகுமாா் அன்று மாலையே பெங்களூரு திரும்புகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.