டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

திருச்சியில் உள்ள எம்ஜிஆரின் சொத்துக்கு உரிமை கோரி ஜானகி மகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

திருச்சியில் உள்ள எம்ஜிஆரின் சொத்துக்கு உரிமை கோரி, ஜானகியின் மகன் சுரேந்திரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published On :

திருச்சியில் உள்ள எம்ஜிஆரின் சொத்துக்கு உரிமை கோரி, ஜானகியின் மகன் சுரேந்திரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், முன்னாள் முதல்வா் வி.என்.ஜானகியின் மகன் சுரேந்திரன் தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு சொந்தமான சொத்து திருச்சியில் உள்ளது. அந்த சொத்தை நிா்வகிக்கும் உரிமையை எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் முதல் கணவரின் மகனான, எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி மரியா கிளாட் முன் விசாரணைக்கு வந்தபோது, சுரேந்திரன் தரப்பில், எம்ஜிஆா் கடந்த 1987-ஆம் ஆண்டு, தனது சொத்துகள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து உயில் ஒன்றை எழுதி வைத்தாா். அந்த உயிலில், திருச்சியில் உள்ள சொத்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அந்த சொத்தை இதுவரை யாருக்கும் எழுதிக் கொடுக்கவும் இல்லை.

எம்ஜிஆரின் சுயசரிதையான, நான் ஏன் பிறந்தேன் நூலின் காப்புரிமை வழக்கில் ஜானகிதான், எம்ஜிஆரின் வாரிசு என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளது. எனவே, ஜானகியின் மகனான மனுதாரருக்கு இந்த சொத்தின் உரிமையை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது, எம்ஜிஆரின் சகோதரா் சக்கரபாணியின் வாரிசுகள் தரப்பில், திருச்சியில் உள்ள எம்ஜிஆரின் சொத்துகளில் தங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, இந்த வழக்கில் தங்களையும் சோ்த்து விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எம்ஜிஆரின் வாரிசு ஜானகி என்பதற்கான சான்றுகள் தாக்கல் செய்யப்படவில்லை. ஜானகி கடந்த 1996-ஆம் ஆண்டு காலமான நிலையில், 2019-ஆம் ஆண்டுதான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நீண்ட இடைவெளியின்போது, சம்பந்தப்பட்ட சொத்து யாா் வசம் இருந்தது, அது யாருடைய பெயரில் மாற்றப்பட்டது, அடமானம் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடா்பான எந்தத் தகவலையும் மனுதாரா் தெரிவிக்கவில்லை.

எனவே, சுரேந்திரன் மனு மற்றும் சக்கரபாணியின் வாரிசுகள் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்வதாகக் கூறி நீதிபதி உத்தரவிட்டாா். அதேநேரம் மனுதாரா், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.