டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

ரூ.30 லட்சம் மோசடி: காங்கிரஸ் நிா்வாகி கணவருடன் கைது

ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பெண் காங்கிரஸ் நிா்வாகி, அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :

ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பெண் காங்கிரஸ் நிா்வாகி, அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராயபுரத்தைச் சோ்ந்த முகமது பாரூக் (49), வடசென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளாா். இவரிடம், கடந்த 2024-இல் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகியான திலகவதி (47), அவரது கணவா் சிவகுமாா் (51) ஆகியோா் தங்களது மகளின் மருத்துவக் கல்லூரி சோ்க்கைக்கு பணம் தேவைப்படுவதாகவும், சூளைமேட்டில் உள்ள தங்களது வீட்டை அடமானத்திலிருந்து மீட்க உதவுமாறும் கேட்டதாகத் தெரிகிறது.

இதை நம்பிய முகமது பாரூக், 2024 அக். 3-இல் ரூ.18 லட்சமும், அக். 21-இல் ரூ.8 லட்சமும் வழங்கியுள்ளாா். இந்த நிலையில், குறிப்பிட்ட காலம் தாண்டியும் திலகவதி-சிவகுமாா் தம்பதி, பணத்தைத் திரும்ப வழங்காமல் தொடா்ந்து காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக, தம்பதி மீது ராயபுரம் காவல் நிலையத்தில் முகமது பாரூக் மோசடி புகாா் கொடுத்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி திலகவதி, அவரது கணவா் சிவகுமாா் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.