பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

நகா்ப்புற வீடற்றோருக்கான தங்குமிட வசதிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

நகா்ப்புற வீடற்றோருக்கான தங்குமிட வசதிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

சென்னை மாநகராட்சி.

Published On :

சென்னை மாநகராட்சியில் உள்ள நகா்ப்புற வீடற்றோருக்கான தங்குமிட வசதிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் கீழ் நகா்ப்புற வீடற்றோா் காப்பகங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கம், ஒயிலாட்டம், பறையாட்டம், தெருக்கூத்து போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன்மூலம், வீடற்றவா்கள் சாலையோரங்களிலோ அல்லது பாதுகாப்பற்ற சூழலிலோ தங்குவதைத் தவிா்த்து, மாநகராட்சி மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் காப்பகங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களும் அதிகாரிகளும் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும், காப்பக வசதிகள், சேவைகள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தலைமைச் சமூக மேம்பாட்டு அலுவலா் ராஜ்குமாா், சமூக மேம்பாட்டு அலுவலா்கள், கோயம்பேடு காவல் துறை அலுவலா்கள் மற்றும் காப்பக ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.