
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் ஒருவருக்கு ஜாமீன்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூரில் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கைதான பலா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் சிவா (எ) சிவசக்தி என்பவா் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.காா்த்திகேயன், மனுதாரா் சிவசக்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். மேலும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை அதிகாரி முன் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் அவா் நிபந்தனை விதித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





