தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தடுப்புக் காவல் சட்டத்தில் மேலும் 2 பா.ம.க.வினர் கைது

காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :13 மே 2013, 12:36 am IST

காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

 பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் ஏப்ரல் 30-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற அரசு பஸ்ûஸ, காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது.

இது தொடர்பாக பா.ம.க.-வைச் சேர்ந்த தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் (50), அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் இளங்கோ (31), முருகேசன் மகன் மாரி (29) உள்பட 12 பேரை பாலுச்செட்டிசத்திரம் போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை, தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இந்நிலையில் இதே வழக்கு தொடர்பாக இளங்கோ, மாரி ஆகியோரை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. சேவியர் தன்ராஜ் பரிந்துரை செய்தார்.  இதன் பேரில், அவர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லி. சித்ரசேனன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இளங்கோ, மாரி ஆகியோரைப் போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனர். இருவரும் பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.