எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கழிவு நீர் குட்டையாக மாறிய குன்னம் அம்மன் கோயில் குளம்

குன்னம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்களால் கழிவு நீர் குட்டையாக மாறி வருகிறது.

News image
Updated On :24 மார்ச் 2016, 9:28 pm

எல். ஐயப்பன்

குன்னம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்களால் கழிவு நீர் குட்டையாக மாறி வருகிறது. இக்குளத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குன்னம் ஊராட்சியில் அம்மன் கோயில் குளம் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவு இருந்த இந்தக் குளம் ஆக்கிரமிப்புகளால் தற்போது சுமார் 1 ஏக்கர் பரப்பளவுக்கும் குறைவாகவே உள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றிலும் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்நடைகளின் கழிவுகளை குளத்தில் கொட்டி வருவதால் குளத்து நீர் அசுத்தமாகி தற்போது கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
 கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த அம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதோடு, ஆக்கிரமிப்பாளர்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குளத்து நீரில் கலந்து வருவதால் குளத்து நீர் மாசடைந்தது. இதைத் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் குளத்து நீரைப் பயன்படுத்துவதை நிறுத்தினர்.
 இந்த நிலையில் குளத்தை மேலும் ஆக்கிரமிப்பு செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து வருகின்றனர். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.