சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

நகராட்சி அலுவலகத்தில் தீவிபத்து

காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 9:48 pm

காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் முதல் தளத்தில் உள்ள அறிவொளி இயக்க அலுவலக அறையில் நண்பகல் 12 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பெருநகராட்சி ஊழியர்களே முயற்சி எடுத்து, சில மணி நேரத்தில் தீயை அணைத்தனர். 
இருப்பினும், தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அவ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். 
தொடர்ந்து, பெருநகராட்சி ஆணையர் சர்தார் அறிவொளி இயக்க அலுவலக அறையை நேரில் பார்வை, ஆய்வு செய்தார். 
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை ஆரம்பத்திலேயே அணைத்து விட்டதால், பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. இவ்விபத்தில், முக்கிய ஆவணங்கள் ஏதும் எரியவில்லை என பெருநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.