துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

சிறப்பு கைத்தறி விற்பனைக் கண்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரத்தில் சிறப்பு கைத்தறி விற்பனைக் கண்காட்சியை ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 4:13 am IST


காஞ்சிபுரத்தில் சிறப்பு கைத்தறி விற்பனைக் கண்காட்சியை ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரத்திலுள்ள பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பாரம்பரிய, நவீன வடிவமைப்பு ரகங்களில் கைத்தறி பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் சரகம் சார்பில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், இதர மாவட்ட சங்க புதிய ரகங்கள் ஆகியவற்றின் விற்பனையை அதிகரிக்கவும், புகழ்மிக்க கைத்தறி நெசவாளர்களின் விதவிதமான கைத்தறி ரகங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், சிறப்பு கைத்தறித் கண்காட்சி மற்றும் விற்பனையை ஆட்சியர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையிலுள்ள அண்ணா பட்டு வளாக லூம் வேர்ல்டில் ஆகஸ்ட் 1 முதல் 7 -ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், காஞ்சிபுரம், திருப்புவனம், ஆரணிச் பட்டு சேலைகள், கோவை மென்பட்டுச் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், பரமக்குடி பருத்திச் சேலைகள், ஈரோடு - சென்னிமலை போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறை, பவானி ஜமுக்காளம், பருத்தி லுங்கிகள் உள்ளிட்ட பல ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சிக்கு, ரூ. 15 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
நிகழ்ச்சியில் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் இணை இயக்குநரும், நிர்வாக இயக்குநருமான சாரதி சுப்புராஜ், அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தின் இணை இயக்குநர்-நிர்வாக இயக்குநர் சி.பிரகாஷ், கைத்தறி அலுவலர் ஆர்.கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.