வேதநாராயணபுரம் வித்யாசாகர் குளோபல் பள்ளி விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தேசிய அளவிலான துப்பாக்கி வீரர் மானஸ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு விழாவிற்கான ஜோதியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தலைவர் அஸ்திமல் சுரானா, பொருளாளர் சுரேஷ் கங்காரியா, தாளாளர் விகாஸ் சுரானா, இயக்குநர் பி.ஜி.ஆச்சார்யா, பள்ளியின் முதல்வர் கல்பனா பிரியா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இதையடுத்து பிற்பகலில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் நபி மொஹமத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வித்யாசாகர் கல்வி குழும உறுப்பினர்கள் விருந்தினரை வரவேற்று கெளரவித்தனர். பள்ளி மாணவிகள் டாகிநீஸ்வரி, கி, அபிநயா ஆகியோர் வரவேற்றுப் பேசினர். தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தர்மா, சாந்தி, அஹிம்சா, சத்தியா ஆகிய 4 அணிகள் பங்கேற்றன.
மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள், பல்வேறு கூட்டு உடற்பயிற்சிகள் மனதை ஒருநிலைப்படுத்தும் தற்காப்புக் கலைகளான கராத்தே மற்றும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தை மாணவர்கள் செய்து காட்டினர். இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள், கோப்பைகள் ஆகியவற்றையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!






