தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸார் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிராஸார் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

News image

ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்திய இந்திரா பேரவையினர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிராஸார் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-ஆவது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில், கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமையில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராமநீராளன், சுகுமாரன், லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அன்னை இந்திரா பேரவை: அதேபோல், அன்னை இந்திரா பேரவை சார்பில் அதன் மாநிலத் தலைவர் உசேன், சாலவாக்கத்தில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், திரளானோர் கலந்துகொண்டு தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர். 
செங்கல்பட்டில்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, செங்கல்பட்டு நகரில் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு திங்கள்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 
செங்கல்பட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா, நகர பொறுப்பாளர் ஜே.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 
மாவட்ட நிர்வாகி டி.ஜெயராமன், முன்னாள் நகரமன்ற உறுப்பினரும் முன்னாள் நகர தலைவருமான முருகன், சிறுபான்மைப் பிரிவு ரியாஸ் பாய், சின்னக்கடை ராஜேந்திரன், அசோக்குமார், பவளவண்ணன், வெங்கட்ராமன், சிவாஜி சீனு, பாண்டியன், கோட்டி உள்ளிட்டோர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்றனர். ராட்டினங்கிணறு அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.