மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளி சிறுமிக்கு 17 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து காஞ்சிபுரம் காது கேளாதோர் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள், சந்தோஷ், குடியரசு, பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில தலைவர் வினோத்குமார் கண்டன உரையாற்றினார்.
இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








