நல்லாமூர் விவசாயக் கிணற்றில் மர்மமான முறையில் இறந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை சித்தாமூர் காவல் துறையினர் கண்டெடுத்தனர்.
மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே நல்லாமூர் கிராமம் உள்ளது.
இங்கு தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. ஏரிக்கரை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக நிலத்தின் பாதுகாவலரும், அப்பகுதி மக்களும் இதைக் கண்டனர். அவர்கள் இத்தகவலை சித்தாமூர் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் (பொ) வடிவேல் முருகன் நேரில் சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து பெண் சடலத்தை வெளியே கொண்டுவரச் செய்தார்.
இறந்த பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். நைட்டி அணிந்த நிலையில் சடலம் இருந்தது. சடலத்தை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு ஆய்வாளர் அனுப்பி வைத்தார்.
இது குறித்து நல்லாமூர் கிராம நிர்வாக அதிகாரி கோ.சரவணன், சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சித்தாமூர் காவல்துறையினர், அப்பெண்ணை யாரேனும் அடித்து கிணற்றில் தள்ளி விட்டார்களா?, அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









