உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியும், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து அந்தப் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுச்சூழலைப் பேண வேண்டியதன் அவசியத்தை பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரசாரம் செய்தன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தையொட்டி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகத்தினர் சுற்றுச்சூழலைக் காப்பதன் அவசியத்தை மக்கள் அனைவரும் உணர வைக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் (பொ) தலைமையில் பேரூராட்சி ஊழியர்களும், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன ஊழியர்களும் சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் கைநீட்டி உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் அனைவரும் பஜார் வீதி, மாடவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.