அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம்
Updated on
1 min read

காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமனம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்யும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் வட்டக்குழு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் வட்டக்கிளை அரசு ஊழியர் சங்கத் தலைவர் மருதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டப் பொருளாளர் வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com