காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 புதிய கல்வி மாவட்டங்கள் தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிதாக ஸ்ரீபெரும்புதூர், குரோம்பேட்டை, மதுராந்தம் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிதாக ஸ்ரீபெரும்புதூர், குரோம்பேட்டை, மதுராந்தம் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கல்வி மாவட்டங்களிலும் மொத்தம் 2,601 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், சுய நிதிப் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன.
இந்நிலையில், காஞ்சி மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், குரோம்பேட்டை ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக கல்வி மாவட்டத்தை உருவாக்கி அரசு கடந்த 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
காஞ்சி வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தவிர மூன்று புதிய கல்வி மாவட்டங்களை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ளஅனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மாவட்ட கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர்கல்வி மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் நிதிஉதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 348 பள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல், குரோம்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்தில் செயிண்ட் தாமஸ் மலை ஒன்றியத்தில் உள்ள நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள 500 பள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மதுராந்தகத்தை தலைமையிடமாக கொண்ட மாவட்டத்தில் அச்சரப்பாக்கம், மதுராந்தகம், லத்தூர், சித்தாமூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 561 பள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 522 பள்ளிகள் இருக்கும். காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 522 பள்ளிகள் இயங்கும். மேலும் மாவட்டத்தில் உள்ள 194 சிபிஎஸ்இ பள்ளிகள் நேரடியாக மாவட்டக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. இனிமேல் மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி இன்றி பள்ளி தொடங்கவோ, தொடர்ந்து நடத்தவோ முடியாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...