எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியும், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து அந்தப் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுச்சூழலைப்

News image
Updated On :5 ஜூன் 2018, 9:17 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியும், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து அந்தப் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுச்சூழலைப் பேண வேண்டியதன் அவசியத்தை பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரசாரம் செய்தன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தையொட்டி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகத்தினர் சுற்றுச்சூழலைக் காப்பதன் அவசியத்தை மக்கள் அனைவரும் உணர வைக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் (பொ) தலைமையில் பேரூராட்சி ஊழியர்களும், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன ஊழியர்களும் சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் கைநீட்டி உறுதிமொழி ஏற்றனர். 
பின்னர் அனைவரும் பஜார் வீதி, மாடவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.