மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தீப விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் மருத்துவர் இ.ஸ்ரீலேகா செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் நா.கோகிலாவாணி வரவேற்றார். இதில், செவிலியர் சேவையை செவ்வனே ஆற்றவும், வருங்காலத்தில் செவிலியர்களுக்கான பங்கு, அவர்களின் நற்பண்புகள், சேவை மனப்பான்மை, செவிலியத்தின் மீதுள்ள ஆர்வம், ஆகியவை குறித்து, மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
கல்லூரி தாளாளர் மருத்துவர் இ.ஸ்ரீலேகா செந்தில்குமார், கல்லூரி முதல்வர் நா.கோகிலாவாணி ஆகியோர் தீபம் ஏற்றி மாணவ, மாணவிகளுக்கு உறுதிமொழியை செய்து வைத்தனர். விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியை எஸ் .ஷகிலா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!






