செங்கல்பட்டு அருகே மொபெட் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டை அடுத்த ஓழலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியின் மகன் தேவேந்திரன் (25). இவர், எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், பணி நிமித்தமாக புதன்கிழமை தனது மொபெட்டில் செங்கல்பட்டுக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு மருத்துவமனை அருகில் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது, மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டை நோக்கி வந்த கார் மோதியதில், தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு நகர போலீஸார், தேவேந்திரன் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டுஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.